‘த’கரத்தை மட்டுமே வைத்து எழுதப்பட்ட வெண்பா

Leave a comment

தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி

துத்தித் துதைதி துதைதத்தா தூதுதி

தித்தித்த தித்தித்த தாதெது? தித்தித்த

தெத்தாதோ தித்தித்த தாது?

நூல்: தனிப்பாடல்

பாடியவர்: காளமேகம்

சூழல்: முற்றிலும் ‘த’கர எழுத்துகளைமட்டுமே வைத்து எழுதப்பட்ட வெண்பா இது – கீழே உள்ள ‘சுருக்’ விளக்கம் மொக்கையாகத் தோன்றுகிறதே என்று நினைக்கவேண்டாம், இதைச் சொல்வதற்காக அவர் எப்பேர்ப்பட்ட வார்த்தை விளையாட்டு ஆடியிருக்கிறார் என்பது கொஞ்சம் கவனமாகப் பிரித்தால்தான் விளங்கும் – முழு விளக்கத்தைப் படிக்கவும் More

[பாடல் வரிகள்] Girl you are my chamak challo (தமிழ் வரிகளுடன்- Tamil Version)

Leave a comment

Girl you are my chamak challo
where you go girl
im gonna follow
what you want girl
just let me know
oooh oooh ohh
you can be my chamak challo
ooh ohh

shorty im gonna get ya
you know im gonna get ya
you know i’ll even let you
let you be my chammak challo

நீ என்னை ஏற்று கொண்டால் கண்ணில் கொஞ்சம் காட்டு
நீ மட்டும் இல்லை என்றால் நேசிக்காது காத்து
பேசாத வார்த்தை சொல்லி பேரின்பத்தை கூட்டு
வாழாத வாழ்க்கை வாழ்வோம் வா

wannabe my chammak challo (4)

முத்தான chamak challo
மொத்தத்தில் சங்கதி எல்லோ
இது இனி என் உரிமை அல்லோ ஓ ஓ ஓ
முத்தான chamak challo

shorty im gonna get ya
you know im gonna get ya
may be i’ll even let you be my chammak chammak challo

நீ என்னை ஏற்று கொண்டால் கண்ணில் கொஞ்சம் காட்டு
நீ மட்டும் இல்லை என்றால் நேசிக்காது காத்து
பேசாத வார்த்தை சொல்லி பேரின்பத்தை கூட்டு
வாழாத வாழ்க்கை வாழ்வோம் வா

wannabe my chammak challo (4)

எப்போதுமே கண் அடிப்பா? நீ என்ன naughty அ?
எல்லாருமே பார்த்திருக்க முத்தாட பாப்பியா?
ஓரத்திலே சாய்ந்திருக்க நான் என்ன பாட்டியா?
உள்ளத்திலே காதலோடு ஓட்டிக்க மாட்டியா?

நீ என்னை ஏற்று கொண்டால் கண்ணில் கொஞ்சம் காட்டு
நீ மட்டும் இல்லை என்றால் நேசிக்காது காத்து
பேசாத வார்த்தை சொல்லி பேரின்பத்தை கூட்டு
வாழாத வாழ்க்கை வாழ்வோம் வா…

திருவிளையாடல்: சிவன் – நக்கீரர் உரையாடல்

1 Comment

சிவாஜி கனேசன் நடித்த திருவிளையாடல் படத்தை நாம் அனைவரும் பார்திருப்போம். அந்தப்படத்திலே வரும் சிவன் – நக்கீரர் உரையாடல் எனக்கு மிகவும் பிடித்தது. அதனைச் அன்மையில் இணையத்தில் வாசிக்க நேர்ந்தது. அதனை உங்களோடு பகிர்கின்றேன்:

அரசன், அரசி, அவர்களைச் சுற்றிலும், இவ்வளவு மலர்கள் நறுமணம் வீசிக்கொண்டிருந்த போதிலும், மன்னனுக்குத் தன் அருகில் இருந்த அரசியின் கூந்தலில் தனியொரு நறுமணம்_மாறுபட்ட மணம் கமழ்வதாக உணர்ந்தான்.

திரும்பித்தன் தேவிதன்னை நோக்கினான்
தேவி அய்ம்பால்
இரும்பித்தை வாசமாகி இருந்தது
ஈண்டுஇவ் வாசம்
சுரும்புவிற்குத் தெரியா தென்னா
சூழ்ந்து இறும்பூச தொண்டீது
அரும்பித்தைக் கியல்போ செய்கையோ
வெனஅய்யம் கொண்டான்

அரசனல்லவா? உடனே தனக்கு ஏற்பட்ட ஐயத்தை அறிவித்து, தீர்த்துவைப்பவருக்கு ஆயிரம் பொன் பரிசு எனக் கூறினார். இங்கே எனது 12ஆம் வகுப்பு தமிழ் ஆசிரியர், “மங்கையின் கூந்தலுக்கு இயற்கை மணமா? செயற்கை மணமா என்று ஆராய்வது தான் ஒரு அரசனின் வேலையா? இந்த லட்சணத்தில் அவனது ஆட்சி எந்தப் போக்கில் இருந்திருக்கும்.” சொன்னது நினைவுக்கு வருகின்றது. அப்போது நாங்க எல்லோரும் வாய்விட்டு சிறித்தோம். ஹ்ம்ம் அது ஒரு கானாக்காலாம்…. :D More

[பாடல் வரிகள்] ஓட ஓட ஓட

1 Comment

படம்: மயக்கம் என்ன
பாடியவர்: தனுஷ்
இசை: ஜி. வி. பிரகாஷ்
ஆண்டு: 2011

ஓட ஓட ஓட தூரம் குறையல
பாட பாட பாட பாட்டும் முடியல
போக போக போக ஒன்னும் புரியல
ஆகா மொத்தம் ஒன்னும் விளங்கல
Freeயா சுத்தும் போது Figure இல்லையே
பிடிச்ச Figure ம் இப்ப Freeயா இல்லையே
கையில Batஇருக்கு Ballஇல்லையே
Life பூரா இந்த தொல்லையே…

உலகமே Speedஆ ஓடி போகுது
என் வண்டி பஞ்சர் ஆகி நிக்குது
மொக்க Piece கூட கிண்டல் பண்ணுது
சாமி என்ன பந்தம் பண்ணுது More

இட ஒதுக்கீடு எனது பார்வையில் – My Thoughts on Reservations

Leave a comment

(For English translation see end of this Post)
இக்கட்டுரையை எழுதுவதற்கு பல முறை யோசித்தும், எழுதாமல், விட்டுவிட்டேன். சில நாட்களுக்கு முன் சாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடைப்பற்றி சில நண்பர்களுடன் பேச நேர்ந்தது. எல்லோருமே அது தவறு என்றே கூறினர். இதில் வேடிக்கை என்ன வென்றால், கூறிய எவருமே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் அல்லர். அவர்களுக்கு சத்தியமாக தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறப்பதென்பது எவ்வளவு கடினமானது என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இதற்கு முன், நான் ஒரு கிறித்தவன். எனக்கு கிறித்தவன் என்பதினால் இந்திய அரசின் எந்த ஒரு இட ஒதுக்கீட்டிற்கும், தகுதியற்றவன் என்பதை தெளிவுபடுத்த விழைகின்றேன் (கீழே விளக்கம் உள்ளது).

எல்லோருமே தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்தவரின் கல்வி செலவு மிக மிக குறைவானது என்பதனையே திரும்பத் திரும்பக் கூறினர். அவர்களுக்கு எதனால் இப்படி ஆனது என்பது குறித்து கவலை இருப்பதாக தோன்றவில்லை.

வெளிப்படையில் சாதி என்பது இந்திய சமுதாய சூழலில் இருப்பதாக தெரியவில்லை எனினும். இன்றளவும் கூட, சாதிக்குள்ளேயே திருமணம் என்பதே எழுதாத சட்டமாக இருக்கின்றது. வெளிசாதிக்காரன் வீட்டினும் நுழைந்ததால் வீட்டை கழுவிட்ட நண்பனின் (படித்த) தாயை பார்த்த போதும் சரி, தாழ்த்தப்பட்ட வகுப்பைப் பற்றி தரம் குறைவாக என்னிடமே பேசிய மற்றோரு நண்பனானாலும் சரி, சாதீயம் இன்னும் இந்தியாவை விடவில்லை என்பதே இது உணர்த்துகின்றது. More

[மதம்] பிறிந்த சகோதரர்களுக்கு ஒரு கேள்வி.

Leave a comment

பிறிந்த சகோதரர்களுக்கு ஒரு கேள்வி:

திருவிவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் உள்ள 27 புத்தகங்கள் (தூய ஆவியால் தூண்டப்பட்ட) கடவுளுடைய வார்த்தை என எந்த அதிகாரத்தின் அடிப்படையில் நம்புகிறீர்கள்? என் கேள்வி பழைய ஏற்ப்பாட்டினை பற்றியது அல்ல. ஆனால், புதிய ஏற்பாட்டின் 27 புத்தகங்கள் மட்டும் தான் கடவுளின் வார்த்தை என எதன் அடிப்படையில் ஏற்றுக்கொள்கிறீர்கள்?

என் கேள்வி இந்த 27 புத்தகங்களின் வரலாற்றினைப் பற்றியது அல்ல. அது யாரால் எதற்க்காக எழுதப்பட்டது என்பதனைப்பற்றியது அல்ல. ஆனால் அவறை நீங்கள் ஏற்க்கும் அதிகாரத்தின் உண்மைத்துவத்தைப்பற்றியது. More

[படித்தது] சண்டைத்தோழி – கட்டளை ஜெயா

Leave a comment

கட்டளை ஜெயாவின் கவிதை தொகுப்பு நூல், சண்டைத்தோழி (KR313 / 149).

மிக அருமையான சிறு சிறு கவிதைகளால் புத்தகம் நிரம்பி வழிகின்றது. ஒரு ஆணுக்கும் பெண்னுக்கும் இடையே உள்ள, காதலும் காமமும் கலக்காத, ஆழ்ந்த நட்பினைப் பற்றியது இந்த நூல்.

நூலிலிருந்து சில கவிதைகள் :

“என் கழுத்துக்கு
நெக்லெஸ் போன்றவன்
என்றும் எல்லை தாண்டியதில்லை”

“உன் விடுமுறை கடிதம் கொடுக்கவே
பள்ளிக்கு செல்கிறேன்”

“காதலி
மிஸ்டுகால் கொடுக்கும் போதெல்லாம்
பேசிக்கொண்டிருக்கிறேன்

பேலன்ஸ் தீரத் தீர
டாப் அப் செய்து கொண்டிருக்கிறாள்
தோழி”

“உன் பிறந்த நாளுக்கு
முந்தைய நாள்
ஆளுக்கொரு ஆடைவீதம்
பரிசளித்தோம்

பிறந்தநாளன்று
யார் கொடுத்த ஆடையை
அணிந்து வருவாய் என்று
பதற்றத்திலிருந்தான் உன் காதலன் More

Lyrics: ஹே ஒத்த சொல்லால

2 Comments

படம்: ஆடுகளம்
இசை: ஜி. வி. பிரகாஷ்
பாடியவர்: வேல்முருகன்
பாடலாசிரியர்: எகதேசி

ஹே ஒத்த சொல்லால என் உசுறெடுத்து வச்சிகிட்டா
ரெட்ட கண்ணால என்ன தின்னாடா
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்தி வச்சு
நித்தம் குடிச்சி என கொன்னாடா

ஏ பொட்டகாட்டுல ஆலங்கட்டி மலபேஞ்சி ஆரொன்னு ஓடுறத பாரு
அட பட்டாம்பூச்சி தான் என் சட்டையில ஓட்டிகிச்சி
பட்டாசு போல நான் வெடிச்சேன்
முட்ட கண்ணால என் மூச்செடுத்து போனவதான்
தொட்ட பின்னால ஏதோ ஆனேன்டா

ஏ பவுடர் டப்பா தீர்த்துபோனத
அந்த கண்ணாடியும் கடுப்பு ஆனதே
நா குப்புறக்க படுத்து கெடந்தேன்
என்ன குதுர மேல ஏத்தி விட்டாயே
ஒன்னும் சொல்லாம உசுர தொட்டாயே
மனச இனிக்க வச்ச சீனி மிட்டாயே

ஹே ஒத்த சொல்லால என் உசுறெடுத்து வச்சிகிட்டா
ரெட்ட கண்ணால என்ன தின்னாடா
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்தி வச்சு
நித்தம் குடிச்சி என கொன்னாடா

ஏ கட்டவண்டி கட்டி வந்து தான்
அவ கண்ணழக பார்த்து போங்கடா
அட கட்டுசோறு கட்டி வந்து தான்
அவ கழுத்தழக பார்த்து போங்கடா
கத்தால பழசிவப்பு முத்தாத இளஞ் சிரிப்பு
வத்தாத அவ இடுப்பு நான் கிருக்கானே

ஹே ஒத்த சொல்லால என் உசுறெடுத்து வச்சிகிட்டா
ரெட்ட கண்ணால என்ன தின்னாடா
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்தி வச்சு
நித்தம் குடிச்சி என கொன்னாடா

அட ரேசன் கார்டில் பேர ஏத்துவேன்
ஒரு நாள் குறிச்சி தட்டு மாத்துவேன்
ஏ ஊருக்கெல்லாம் சேதி சொல்லுவேன்
அவ காதில் மட்டும் மீதி சொல்லுவேன்
பொண்ணு கருப்பட்டி கண்ணு தீப்பெட்டி
மேன்னு தின்னாலே என்ன ஒருவாட்டி

ஹே ஒத்த சொல்லால என் உசுறெடுத்து வச்சிகிட்டா
ரெட்ட கண்ணால என்ன தின்னாடா
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்தி வச்சு
நித்தம் குடிச்சி என கொன்னாடா

அட பொட்டகாட்டுல ஆலங்கட்டி மலபேஞ்சி ஆரொன்னு ஓடுறத பாரு
அட பட்டாம்பூச்சி தான் என் சட்டையில ஓட்டிகிச்சி
பட்டாசு போல நான் வெடிச்சேன்
முட்ட கண்ணால என் மூச்செடுத்து போனவதான்
தொட்ட பின்னால ஏதோ ஆநேண்டா

கூடுதல்: இப்பாடலுக்கு முன் வரும் காட்சி:

[Lyrics] நீல வானம் நீயும் நானும்

Leave a comment

படம்: மன்மதன் அம்பு
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்கள்: கமல் ஹாசன், பிரியா ஹிமேஷ்
வரிகள்: கமல் ஹாசன்

நீல வானம் நீயும் நானும்
கண்களே பாஷையாய் கைகளே ஆசையாய்
வையமே கோயிலாய் வானமே வாயிலாய்
பால்வெளி பாயிலே சாயுந்து நாம் கூடுவோம்
இனி நீ என்று நான் என்று இரு வேறு ஆள் இல்லையே..

நீல வானம்
Blue Sky
நீயும் நானும்
You and I

ஏதேதோ தேசங்களை சேர்க்கின்ற நேசம் தன்னை
நீ பாதி நான் பாதியாய் கோர்க்கின்ற பாசம் தன்னை
காதல் என்று பெயர் சூட்டியே காலம் தந்த சொந்தம் இது
என்னை போலே பெண் குழந்தை உன்னை போல் ஒரு ஆண் குழந்தை
நாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றவது இன்னொரு உயிர்தானடி

நீல வானம் நீயும் நானும் More

தமிழுக்கு விளம்பரம் தேவையில்லை

Leave a comment

தமிழுக்கு விளம்பரம் தேவையில்லை
உங்கள் விளம்பரங்களில் தமிழைப் பயன்படுத்துங்கள்

Older Entries

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers